நான்கு மாவட்டங்களுக்கு மின்னல் அபாய சிவப்பு எச்சரிக்கை
ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இன்று (19) கடுமையான மின்னல் அபாயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, இரவு 11.30 மணி வரை, நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 08 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில இடங்களில் கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது .
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக குறிப்பிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.