கணவன் மீது சந்தேகம்; இளம் மனைவியின் முடிவால் சின்னாபின்னமான குடும்பம்

Galle Sri Lanka Police Investigation Relationship Death Women
By Sulokshi May 19, 2026 01:28 PM GMT
Report

   தனது கணவர் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகக் கொண்ட தீவிர சந்தேகத்தின் காரணமாக, கணவர் ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டியிலிருந்து வீதிக்குக் குதித்த 24 வயது இளம் மனைவி ஒருவர், துயரமான முறையில் உயிரிழந்தார்.

பனமுர பொலிஸாரின் தகவலின்படி, உயிரிழந்த இளம் பெண், யக்மதித்த பகுதியின் புலுத்தோட்டத்தைச் சேர்ந்த தில்ஹாரா செவ்வண்டி ஆவார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கணவன் மீது சந்தேகம்; இளம் மனைவியின் முடிவால் சின்னாபின்னமான குடும்பம் | Women Running Three Wheeler Her Husbands Affair

கள்ளத்தொடர்பு ஏதேனும் இருந்ததா....

கடந்த 12-ஆம் திகதி, கணவன்-மனைவி இருவரும் பனமுரவில் அமைந்துள்ள பெண்ணின் பெற்றோர் வீட்டுக்குச் சென்று, அவர்களைச் சந்தித்து மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்றிருந்தனர்.

எனினும், பெற்றோரைச் சந்தித்துவிட்டுத் திரும்பும் வழியில், அந்த முச்சக்கர வண்டிக்குள் எதிர்பாராத விதமாக ஒரு மோதல் வெடித்தது. கணவரின் நடத்தை குறித்து மனதில் புகைந்துகொண்டிருந்த சந்தேகம் வார்த்தைகளாக வெளிப்பட்டபோது, ​​இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.

அருச்சுனா எம்பிக்கு யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பகிரங்க எச்சரிக்கை!

அருச்சுனா எம்பிக்கு யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பகிரங்க எச்சரிக்கை!

கோபத்தையும் வேதனையையும் தாங்கிக்கொள்ள முடியாத அவர், வண்டியிலிருந்து குதித்துவிடுவதாக மிரட்டினார். அத்தஓடு கணவர் சிந்திப்பதற்குக்கூட அவகாசம் அளிக்காமல், ஓடிக்கொண்டிருந்த அந்த முச்சக்கர வண்டியிலிருந்து திடீரென பிரதான வீதிக்குக் குதித்தார். கடுமையான காயங்களுக்கு உள்ளான தனது மனைவியை, கணவர் உடனடியாக பனமுர வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றார்.

அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், அவர் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் பல நாட்கள் உயிருக்குப் போராடிய நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

சட்டத்தரணி, மனைவி மரணம் ; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

சட்டத்தரணி, மனைவி மரணம் ; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

உயிரிழந்த தில்ஹாரா, ஒரு குழந்தையின் தாயாவார். இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக, உயிரிழந்த பெண்ணின் கணவரை பனமுர பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர்.

கணவர் அளித்த வாக்குமூலத்தின்படி, தனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாத வேறொரு பெண் குறித்து, தனது மனைவி மனதில் கொண்டிருந்த நியாயமற்ற சந்தேகமே இந்த வாக்குவாதத்திற்கு வித்திட்டது.

உண்மையில் கள்ளத்தொடர்பு ஏதேனும் இருந்ததா அல்லது அது வெறும் சந்தேகமாக மட்டுமே இருந்ததா என்பது இன்றும் ஒரு புதிராகவே உள்ளது.

நாடாளுமன்றில் சீமானை திட்டித்தீர்த்த அர்ச்சுனா எம்பி; தமிழ் எம்பிக்களுக்கு சவால்

நாடாளுமன்றில் சீமானை திட்டித்தீர்த்த அர்ச்சுனா எம்பி; தமிழ் எம்பிக்களுக்கு சவால்

எனினும், மனைவியின் அந்தத் திடீர் உணர்ச்சிவேகச் செயலின்போது, ​​முச்சக்கர வண்டியை நிறுத்தி அவளது உயிரைக் காப்பாற்ற முயற்சிக்காமல், மரணம் சம்பவிக்க அனுமதித்தமை எனும் கவனக்குறைவு குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்னர், பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பார்கள்.

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US