இலங்கை வடிவில் அரிய இயற்கை நீலக்கல்
இலங்கையின் வடிவிலான அரிய இயற்கை நீலக்கல் ஒன்றை , இரத்தினபுரி நிவித்திகல பிரதேசத்தைச் சேர்ந்த இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் கொள்வனவு செய்ததாக வியாழக்கிழமை (26) தெரிவித்தார்.
இந்த நீல மாணிக்கத்தை மாணிக்கக் கற்கள் சேகரிப்பவர் ஒருவரிடமிருந்து வாங்கியதாகத் அவர் தெரிவித்தார்.
இந்த நீல மாணிக்கத்தை நீங்கள் ஒரே நேரத்தில் பார்த்தால், இலங்கை மற்றும் யாழ்ப்பாண குடாநாட்டின் நிலப்பரப்பு எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் காணலாம். மன்னாரின் நிலையும் அவ்வாறே தோன்றுகிறது.
அதே போல் திருகோணமலை, இலங்கையின் நான்கு திசைகளும் அப்படித்தான் தோன்றும். இந்த இரத்தினக்கல் தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டு, 2024-12-24 அன்று இரத்தினக்கல் அடையாள சோதனை அறிக்கை பெறப்பட்டது.
இந்த இரத்தினக்கல் இயற்கையான கொருண்டம் இனத்தைச் சேர்ந்தது. 5.37 கரட் எடையுள்ள நீலம். என தர்மசேகர மற்றும் ஜானக ஹேமச்சந்திர ஆகியோர் கையெழுத்திட்ட அடையாளச் சான்றிதழில் காணப்பட்டது