போர் பதற்றத்தால் யாழிலும், மட்டக்களப்பிலும் குவிந்த மக்கள் ; களத்தில் பொலிஸார்
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இலங்கையிலும் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படடுள்ள நிலையில் யாழில் எரிபொருளுக்கு வரிசை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீண்ட வரிசைகள்
அந்தவகையில் யாழ்ப்பாணம் - சித்தங்கேணி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து எரிபொருளை நிரப்பி வருகின்றனர்.

மட்டக்களப்பு நகரம், ஆரையம்பதி, காத்தான்குடி, தாளங்குடா, கொக்கட்டிசோலை மற்றும் குருக்கள்மடம் உள்ளிட்ட பல இடங்களில் இன்று (சனிக்கிழமை) காலை முதல் பெற்றோல் நிலையங்களில் கடும் நெரிசல் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சனநெரிசலைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட அளவிலேயே எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது நிலவும் இந்த திடீர் பதற்ற நிலைமையால் பாதுகாப்பு கருதி சில இடங்களில் பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.