இலங்கை சினிமாவின் ராணி மாலினி பொன்சேகா காலமானார்
சிங்கள திரையுலகின் பிரபல நடிகையான மாலினி பொன்சேகா இன்று சனிக்கிழமை (24) அதிகாலை காலமானார்.
மாலினி பொன்சேகா உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். மாலினி பொன்சேகா உயிரிழக்கும் போது அவருக்கு 76 வயதாகும்.
அதேவேளை பைலட் பிரேமநாத் என்ற இந்திய- இலங்கை கூட்டுத் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் கதாநாயகியாக நடித்ததன் மூலம் மாலினி பொன்சேகா , தமிழ் இரசிகர்களிடையே அவர் பேசப்படும் ஒருவரானார்.
சுமார் 70 வருடங்களுக்கு மேலாக நாட்டின் கலை மற்றும் சினிமாவில் மிகவும் மதிக்கப்படும், செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக காணப்பட்ட மாலினி பொன்சேகா, “இலங்கை சினிமாவின் ராணி” என அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.