தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து
கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியின் திக்வெல்ல, பொல்கஹமுல்ல பகுதியில் இன்று (13) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பாந்தோட்டை திசையிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த மாணவர் பேருந்து, கதிர்காமம் நோக்கிப் பயணித்த லங்கம பேருந்துடன் மோதியதில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து காரணமாக அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.