அநுர அரசாங்கத்தின் பிரபல அமைச்சரின் தங்கையின் கணவன் கைது - நிதி மோசடி அம்பலம்
சமகால அநுர அரசாங்கத்தின் பிரபலமான அமைச்சு பதவியை வகிக்கும் ஒருவரின் உறவினர் நிதி மோசடியின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை - ஹமுதுகல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் 10 லட்சம் ரூபாய் பணத்தை மோசடியாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி மோசடி
கடந்த நாட்களில் நடைபெற்ற அரசாங்கத்தின் வாகன ஏலத்தின் மூலம் வாகனம் ஒன்றை வழங்குவதாகக் கூறி, இந்த பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர் அரசாங்கத்தின் பிரபல அமைச்சரொருவரின் மனைவியின் தங்கையின் கணவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் பள்ளந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவராகும். தான் பெற்றுக் கொண்ட பணமோ அல்லது ஏல வாகனமோ தனக்குக் கிடைக்காமையின் காரணமாக குறித்த வர்த்தகர் கேகாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சட்ட நடவடிக்கை
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைவாக அமைச்சரின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்தவின் சகோதரியின் கணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அநுர அரசாங்கத்தில் சட்டம் தன் கடமையை பாரபட்சமின்றி செய்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.