தென்னிலங்கை மீனவர்களால் முல்லைத்தீவு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு ; ரவிகரன் எம்.பி ஆவேசம்

Colombo Mullaitivu Sri Lanka Fisherman
By Sahana Aug 11, 2026 09:55 PM GMT
Report

முல்லைத்தீவு கடற்பரப்பில் வெளிமாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மீன்பிடி அனுமதிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், அங்கு இடம்பெற்று வரும் சட்டவிரோதக் கடற்றொழில் நடவடிக்கைகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க புதிய திட்டம் ; ஜனாதிபதி முக்கிய நடவடிக்கை

விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க புதிய திட்டம் ; ஜனாதிபதி முக்கிய நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நடப்பாண்டிற்கான இரண்டாவது கடற்றொழில்சார் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இக்கோரிக்கையை முன்வைத்தார்.

இக்கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தென்னிலங்கை மீனவர்களால் முல்லைத்தீவு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு ; ரவிகரன் எம்.பி ஆவேசம் | Southern Sri Lankan Mullaitivu Fishermen Affected

முல்லைத்தீவு கடற்பரப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மீன்பிடி முறைகள் தொடர்பில், அப்பகுதி மீனவர்களால் பெறப்பட்ட தெளிவான புகைப்பட ஆதாரங்களை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், நேரடியாகவே கடற்றொழில் அமைச்சரிடம் கையளித்து உடனடி நடவடிக்கை கோரினார்.

கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய ரவிகரன் எம்.பி, கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தால் வெளிமாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்படும் அனுமதிகளே இச்சட்டவிரோதச் செயல்களுக்கு வழிவகுப்பதாகக் குற்றம்சாட்டினார்.

"தென்னிலங்கையைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு முள்ளிவாய்க்கால் பகுதியில் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அவர் சாலைப் பகுதியில் ஐந்து படகுகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக உள்ளூர் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய வெளிமாவட்ட ஊடுருவல்களால் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பாரம்பரிய மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்" என அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் வெளிமாவட்ட மீனவர்களுக்கு வழங்கும் அனுமதிகளை உடனடியாக ரத்து செய்வதோடு, முல்லைத்தீவு கடற்பகுதியின் வளங்களைப் பாதுகாக்கவும் உள்ளூர் மீனவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

இலங்கையில் வட்டி விகிதம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

இலங்கையில் வட்டி விகிதம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US