இலங்கையில் மீண்டும் அதிகரித்த மரக்கறிகளின் விலைகள்! இன்றைய விலை நிலவரம்
இலங்கையில் மரக்கறிகளின் விலைகள் இன்றையதினம் (16-06-2024) மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, பேலியகொடை மெனிங் சந்தையில் ஒரு கிலோ கரட் 300 ரூபாவாகவும், ஒரு கிலோ போஞ்சி 500 ரூபாவாகவும், ஒரு கிலோ பீட்ரூட் 450 ரூபாவாகவும், ஒரு கிலோ லீக்ஸ் 500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுகின்றன.
மேலும், ஒரு கிலோ தக்காளி 400 ரூபாவாகவும் ஒரு கிலோ பச்சை மிளகாய் 300 ரூபாவாகவும், ஒரு கிலோ கறி மிளகாய் 450 ரூபாவாகவும், ஒரு கிலோ கத்தரிக்காய் 460 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுகின்றன.
மேலும், ஒரு கிலோ தேசிக்காய் 1,200 ரூபாவாகவும், ஒரு கிலோ இஞ்சி 2,700 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுகின்றன.
இதேவேளை, நாராஹென்பிட்டி சந்தையில் ஒரு கிலோ கரட் 480 ரூபாவாகவும், ஒரு கிலோ போஞ்சி 700 ரூபாவாகவும், ஒரு கிலோ பீட்ரூட் 680 ரூபாவாகவும், ஒரு கிலோ லீக்ஸ் 700 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுகின்றன.
ஒரு கிலோ பச்சை மிளகாய் 400 ரூபாவாகவும் ஒரு கிலோ கறி மிளகாய் 600 ரூபாவாகவும் ஒரு கிலோ கத்தரிக்காய் 600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஒரு கிலோ தேசிக்காய் 1,400 ரூபாவாகவும், ஒரு கிலோ இஞ்சி 3,700 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.