டெல்லியில் அரசுக்கு அழுத்தம் அதிகரிப்பு ; போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கிறது
டெல்லி ஜந்தர் மந்தரில் "கரப்பான் பூச்சி ஜனதா கட்சி" முன்னெடுத்து வரும் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
நாடாளுமன்றம் நோக்கிய பேரணியின் போது ஏற்பட்ட வன்முறை மற்றும் தடியடிக்குப் பின்னர், அங்கு காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சோனம் வாங்சுக்கின் விடுதலை, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் மற்றும் நீட் வினாத்தாள் கசிவை அடுத்து உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை முன்னிட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டக் குழுவினர் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்து மனு அளித்த நிலையில் கோரிக்கைகள் குறித்து உரிய மட்டத்தில் விவாதிப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இளைஞர் தலைவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்கும் வரை அல்லது மருத்துவமனைக்கு வந்து தன்னைச் சந்திக்கும் வரை தனது உணவு தவிர்ப்பு போராட்டம் தொடரும் என சோனம் வாங்சு அறிவித்துள்ளார்.