யாழில் இன்று பணி புறக்கணிப்பில் சுகாதார தரப்பினர் ; பெரும் அவதிக்குள்ளாக போகும் மக்கள்
யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் மற்றும் கணக்காளரின் செயற்பாடுகளுக்கு எதிராக இன்று பணி புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தரப்பினர் அறிவித்துள்ளனர்.
இதன்படி, யாழ்ப்பாணம் மாநகர சபை வைத்திய அதிகாரிகள், யாழ்ப்பாணம் மாநகர சபை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் உள்ளிட்ட சில சங்கங்கள் இணைந்து இவ்வாறு புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.
இதன் காரணமாக யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதார சேவைகள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சிகிச்சை நிலையங்கள் ஆகியன இன்று முதல் முடங்கும் அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி புறக்கணிப்பின் போது பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்த முழுமையான பொறுப்பையும் மாநகர சபை ஆணையாளரும் கணக்காளரும் ஏற்க வேண்டும் எனவும் சுகாதார தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.