நடு வீதியில் துடிதுடித்து பலியான இளம் யுவதி ; 24 வயது இளைஞனால் வந்த வினை
கம்பஹா மாவட்டம், தொம்பே பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளம் யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தொம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முதற்கட்ட விசாரணை
அவர் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, எதிரே வந்த வேனுடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தின் போது ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக அந்த யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், வாகனத்தின் சாரதியான 24 வயதுடைய இளைஞரைக் கைது செய்துள்ளனர்.
சாரதியின் கவனக்குறைவான வாகனம் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.