கேந்திர திருஷ்டி யோகத்தால் கோடீஸ்வர யோகத்தை பெறும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
மார்ச் 18 ஆம் தேதி குருபகவான் மற்றும் சுக்கிரன் இணைந்து சக்திவாய்ந்த கேந்திர திருஷ்டி யோகத்தை உருவாக்கப்போகின்றன. குருபகவான் மற்றும் சுக்கிரனின் இந்த இணைப்பு மூலம் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம் சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் வெற்றியையும், முன்னேற்றங்களையும் தரப்போகிறது.

கேந்திர திருஷ்டி யோகத்தால் மகத்தான நன்மைகளை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என நாம் இங்கு பார்ப்போம்.

மேஷம்
இந்த கேந்திர திருஷ்டி யோகத்தால் மேஷ ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகிறது. குருபகவானின் ஆசீர்வாதம் அவர்களுக்கு பல நன்மைகளை அளிக்கப்போகிறது. அதுமட்டுமின்றி, சுக்கிரனின் செல்வாக்கு அவர்களின் நிதி நிலையை இரட்டிப்பாக்குகிறது. அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக முழு பிரபஞ்சமும் அவர்களுக்கு துணையாக இருக்கும் இருக்கும். அவர்களின் வாழ்க்கையில் நீண்ட காலம் மகிழ்ச்சியைக் கொடுக்கும் மாற்றங்கள் ஏற்படும். குருபகவானின் ஆசியால் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும், அவர்களின் திறமை மீது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

சிம்மம்
இந்த கேந்திர திருஷ்டி யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பொற்காலத்தை அளிக்கப்போகிறது. குருபகவான்-சுக்கிரன் இணைப்பு அவர்கள் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான மாற்றங்களை கொண்டுவரப்போகிறது. இந்த சக்திவாய்ந்த யோகத்தால் அவர்கள் தங்கள் வணிக வாழ்க்கையில் எதிர்பார்த்த பெரிய வெற்றியைப் பெறுவார்கள், மேலும் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து பெரிய அளவில் சம்பாதிக்க முடியும். பல்வேறு முதலீடுகளிலிருந்து வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் உள்ளன. வீட்டிற்காக சில ஆடம்பர பொருட்களை வாங்கலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் கேந்திர திருஷ்டி யோகத்தால் பல்வேறு நன்மைகளை அடையப்போகிறார்கள். இந்த ராஜயோகத்தின் காரணமாக அவர்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றிகரமாக முடிவடையும். அவர்களின் பொருளாதார நிலை இப்போது பலமடங்கு அதிகரிக்கும். அலுவலகத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களுக்கு சிறப்பான பலன்களைக் கொடுக்கும். இது வேலை செய்பவர்களுக்கு பல நேர்மறையான நன்மைகளைத் தருகிறது.
