யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் மின் தடை ; அவதியில் மக்கள்
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இன்று திடீரென மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.
மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் தடை காரணமாகப் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இருப்பினும், தடையை சீரமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும், இன்று மதியம் 12.00 மணியளவில் மின்சாரம் மீண்டும் வழமைக்கு திரும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குடாநாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரம் வழமைக்குத் திரும்பி உள்ள நிலையில், சில பகுதிகளில் தற்போது வரை மின்வெட்டு நடைமுறையில் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை யாழில் (Jaffna) கடந்த பல நாட்களாக விட்டுவிட்டு மின்தடை ஏற்படுவதால் மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்த மின் தடைக்கு காரணம் மின் இணைப்புகளில் தூசி படித்தமையே என தெரிவிக்கப்பட்டது.
எனினும் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் மின்வெட்டுக்கான காரணம் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.