14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் காதலனை தேடும் பொலிஸார்
14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 41 வயதுடைய காதலனை கைது செய்வது தொடர்பில் பதுரலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் களுத்துறை, தொடங்கொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. களுத்துறை, பதுரலிய பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியே பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி கடந்த 25 ஆம் திகதி அன்று தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதன்போது, சந்தேக நபர் தனது நண்பனுடன் இணைந்து முச்சக்கரவண்டியில் சிறுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
பின்னர், சந்தேக நபர் இந்த சிறுமியை தொடங்கொட பிரதேசத்தில் உள்ள தனது நண்பனின் வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இதனையடுத்து, பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமியின் தந்தை இது தொடர்பில் பதுரலிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
சந்தேக நபரான காதலனை கைது செய்வது தொடர்பில் பதுரலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.