பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு
கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சமூக வலைத்தள அவதூறு விவகாரம் ; யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட 14 மனுதாரர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸாரின் கட்டளைக்கு அமைய வேனை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்ட போதிலும், அதன் சாரதி கட்டளையை மீறி வேனை முன்னோக்கிச் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, குறித்த வேனை நிறுத்தும் நோக்கில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் வேன் சாரதி காயமடைந்த நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் மற்றும் வேன் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்றமை தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.