யாழில் ஆசிரிய மாணவி தற்கொலை விவகாரம் ; உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு அர்ச்சுனா கோரிக்கை
யாழ் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவியை தற்கொலைக்கு தூண்டிய விரிவுரையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை முன்வைத்தார்.
மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரியர் மாணவி ஒருவரை அங்கு கடமையாற்றும் விரிவுரையாளர் ஒருவர் பாலியல் ரீதியான வார்த்தை பிரயோகத்தால் உளநீதியாக தாக்கம் அடைந்த நிலையில் தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பியுள்ளார்.

குறித்த மாணவி குறித்த விரிவுரையாளர் தொடர்பில் கல்லூரி நிர்வாகத்திற்கு எழுதிய கடிதம் வெளியாகி இருக்கிறது.
குறித்த மாணவி விரிவுரையாளரால் உளநீதியாக தாக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார் ஆனால் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் உணவு வழங்கலில் பெரிய முறைகேடு இருப்பது உள்ளகக் கணக்காய்வு அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்ற நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆகவே குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டு இருக்கிறார் அதனை நான் வரவேற்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்