லண்டன் சென்ற தமிழக முதல்வர் ; இரவு முழுவதும் காத்திருந்து ஈழத்தமிழ் பெண் செய்த செயலால் நெகிழ்ச்சி
அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் விஜய்க்கு, அங்கு வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் பூங்கொத்துகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஆறு நாள் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், அங்கு தங்கியுள்ள நட்சத்திர விடுதிக்கு நேற்று சென்றடைந்தார்.

பெண் வழங்கிய கடிதம்
முதலமைச்சர் விஜயை வரவேற்பதற்காக லண்டனில் வசிக்கும் ஏராளமான இலங்கைத் தமிழர்கள் விடுதி வளாகத்தில் திரண்டிருந்தனர்.
அவர்கள் பூங்கொத்துகளை வழங்கி அவருக்கு தங்களது அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
இதன்போது, முதலமைச்சர் விஜயை சந்திப்பதற்காக இரவு முழுவதும் காத்திருந்ததாகக் கூறப்படும் பிரித்தானியாவில் வசிக்கும் 19 வயதான ஈழத் தமிழ் பெண் ஒருவர், தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் எழுதிய கடிதம் ஒன்றை அவரிடம் வழங்கியுள்ளார்.
அந்தக் கடிதத்தை முதலமைச்சர் விஜய் அன்புடன் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த சந்திப்பு மற்றும் இளம் பெண் வழங்கிய கடிதம் தொடர்பான தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.