கோட்டாபாய பாணியில் நாட்டைவிட்டு தப்பியோடும் பங்களாதேக்ஷ் பிரதமர்!
பங்களாதேக்ஷ் பிரதமர் பதவியை இராஜினாமா செய்த ஷேக்ஹசீனா இந்தியாவிற்கு சென்றுகொண்டிருக்கின்றார். இந்தியாவின் அகர்தலா நகரத்திற்கு அவர் சென்றுகொண்டிருக்கின்றார் என பிபிசி தெரிவித்துள்ளது.
பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார் .
கோட்டா பாணியில் வெளியேற்றம்
மாணவர்கள் ஆயிரக்கணக்கில் தலைநகர் டாக்காவை நோக்கி பேரணியாக சென்றுகொண்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை கடந்த காலங்களில் முன்னாள் இலங்கை ஜனாதிபதியான் கோட்டாபய ராஜபக்க்ஷவும், மக்கள் போராட்டத்தை கண்டு அஞ்சி நாட்டைவிட்டு மாலைதீவுக்கு தப்பி ஓடியிருந்தார்.
இந்நிலையில் வெடித்த மாணவர்கள் போராட்டத்தால் , கோட்டாபய பாணியில் பங்களாதேக்ஷ் பிரதமர் ஷேக்ஹசீனாவும் இந்தியாவுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.