தீபாவளிக்கு பலகார சண்டையால் உயிரை மாய்த்த கணவன்
பசறை, மடுல்சீமை தோட்டத்தில் தீபாவளிக்கு பலகாரம் செய்வதற்கான பொருட்கள் வாங்கி வருமாறு மனைவி சண்டையிட்டதால் மனவேதனையடைந்த கணவன் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சம்பவமொன்று நடந்துள்ளது.
கடந்த (07ஆம் திகதி) ஊவாகலே தோட்டத்தில் உள்ள லயன் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இருவருக்கும் இடையே தகராறு
உயிரிழந்தவர் செல்வராஜா குணநாதன் எனும் 36 வயதுடையவராவார், மேலும் 03 மற்றும் 06 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதியாக பணிபுரியும் நபரின் மனைவி தோட்டத்தில் பணியாற்றி வருபவர். உயிரிழந்தவர் (07ஆம் திகதி) மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளதாகவும், அந்த நேரத்தில் மனைவி பலகாரம் செய்வதற்கு கடையில் பொருட்கள் வாங்கி வருமாறு கூறியதாகவும், உயிரிழந்தவர் அதனை நிராகரித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட மனவேதனையால் இந்த தற்கொலை நடந்துள்ளதாக மரண விசாரணை அதிகாரி அறிவித்துள்ளார்.