கொக்காவிலில் சிறுநீர் கழிக்க இறங்கியதால் தப்பிய உயிர்கள்; காரை பந்தாடிய பாரவூர்தி
வீதியோரமாக காரினை நிறுத்தி விட்டு , காரில் இருந்தவர்கள் சிறுநீர் கழிக்க சென்றவேளை , பாரவூர்தி காரினை மோதி தள்ளியதில் கார் பலத்த சேதமடைந்துள்ளது.
எனினும் காரில் எவரும் இல்லாதமையால் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை காரில் பயணித்தவர்கள் , காரினை கொக்காவில் பகுதியில் வீதியோரமாக நிறுத்தி விட்டு இறங்கியுள்ளனர்.

அவர்கள் , சிறுநீர் கழித்துக்கொண்டிருந்த வேளை , வீதியில் வேகமாக வந்த பாரவூர்தி , அவர்களது காரின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.
விபத்தின் போது , காரினுள் எவரும் இல்லாதமையால் , உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டு இருந்தாலும் , விபத்தினால் கார் முற்றாக சேதமடைந்துள்ளது. சமபவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.