வெசாக் தானசாலைகள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வெசாக் தானசாலைகள் பதிவு கட்டாயம் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் தானசாலைகளை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அசேல குணவர்தன (Asela Gunawardena) தெரிவித்துள்ளார்.
அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் இந்தப் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான முறையில் உணவுகளை தயாரித்து விநியோகிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் தானசாலைகளுக்கான பதிவுகள் கடந்த 04 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.