ஆண் நண்பருடன் தேநீர் அருந்த சென்ற மாணவிக்கு நடந்த விபரீதம்
இந்தியா தெலுங்கானா மாநிலத்தில் சக மாணவியை ஏமாற்றி, கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து மாணவியிடம் அத்துமீறிய பொறியியல் கல்லூரி மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம், யாதாத்திரி புவனகிரி மாவட்டம் சவுட்டுப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாணவன், இப்ராஹிம்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 14ஆம் திகதி, தன்னுடன் படிக்கும் சக மாணவி ஒருவரை டீ அருந்துவதற்காக தனது சிற்றூந்தில் அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து இப்ராஹிம்பட்டினத்திற்குத் திரும்பிய போது, வழியிலுள்ள ஒரு மது விற்பனை நிலையத்தில் மதுபானங்களை வாங்கியதுடன், ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்கு அந்த மாணவியை சிற்றூந்தில் அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த மாணவியை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்துடன், அவரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் குறித்த மாணவி அளித்து முறைப்பாட்டின் அடிப்படையில், காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.