பிள்ளையான் , டக்ளசை தொடர்ந்து கைதாகும் நபர் ; கிலியில் பலர்
நாட்டில் தற்போதைய அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் நெருக்கமாக இருந்த ஆயுதக் குழுக்களைச் சார்ந்தவர்களைத் தேடிப் பிடித்துக் கைது செய்யும் நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி தீவிரப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் செல்வாக்கு செலுத்திய முன்னாள் ஆயுதக் குழுத் தலைவர்களின் பழைய குற்றச்சாட்டுகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

வட பகுதியில் அடுத்தடுத்து முக்கிய கைதுகள்
இந்தச் சூழலில், டக்ளஸ் தேவானந்தாவின் கைது என்பது திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. அதேவேளை ஏற்கனவே பிள்ளையான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா போன்ற முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அடுத்ததாக 'கருணா அம்மான்' என அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் மீதும் கைது நடவடிக்கை பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வட பகுதியில் அடுத்தடுத்து முக்கிய கைதுகள் இடம்பெறும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அதிரடி நடவடிக்கைகள் தமிழ் அரசியல் பரப்பில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம் கடந்த கால அரசாங்கங்களால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்குத் தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பையும் மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது