யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் மக்களுக்கு எச்சரிக்கை!

Jaffna Puttalam Sri Lanka Face Mask Air Pollution
By Sulokshi Dec 29, 2025 09:03 AM GMT
Report

  யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரச் சுட்டெண் (AQI) முறையே 92 மற்றும் 100 ஆகப் பதிவாகியுள்ளதாக மக்கள் முககவசம் அணிய அறிவுறுத்தப்படுள்ளது.

இலங்கையின் பல நகர்ப்புறங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் காற்றின் தரம் 'சற்று ஆரோக்கியமற்ற' நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் மக்களுக்கு எச்சரிக்கை! | Air Pollution Sri Lanka Waring Jaffna And Puttalam

முகக்கவசம் அணிய வலியுறுத்து

அதில் முக்கியமாக யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரச் சுட்டெண் (AQI) முறையே 92 மற்றும் 100 ஆகப் பதிவாகியுள்ளது.

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கான முன்னறிவிப்பின்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரச் சுட்டெண் 48 முதல் 112 வரை நிலவக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தேனிலவுக்கு இலங்கைக்கு வந்த புதுமண ஜோடியின் விபரீத முடிவு ; துயரத்தில் உறவினர்கள்

தேனிலவுக்கு இலங்கைக்கு வந்த புதுமண ஜோடியின் விபரீத முடிவு ; துயரத்தில் உறவினர்கள்

இதன்படி யாழ்ப்பாணம் (100–108) மற்றும் புத்தளம் (104–112) ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் 'சற்று ஆரோக்கியமற்ற' (Slightly Unhealthy) மட்டத்தில் இருக்கும். அத்துடன் மொனராகலை மாவட்டத்தில் காற்றின் தரச் சுட்டெண் மிகக் குறைந்த அளவாக 46ஆக பதிவாகியுள்ளது.

அதேசமயம் காலை 8:00 முதல் 10:00 வரையும், மாலை 3:00 முதல் 5:00 வரையும் காற்றின் மாசு அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெய்வம் நின்று கொல்லும்; டக்லஸ் தேவானந்தாவின் பரிதாப நிலை!

தெய்வம் நின்று கொல்லும்; டக்லஸ் தேவானந்தாவின் பரிதாப நிலை!

காற்றின் தரச் சுட்டெண் (AQI) முக்கியமாக PM2.5 எனப்படும் நுண் துகள்களின் அளவை வைத்தே கணக்கிடப்படுகிறது. இவை சுவாசிக்கும்போது நுரையீரலுக்குள் ஊடுருவிச் சென்று பல்வேறு சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை.

காற்றின் தரம் குறைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மாசு அதிகம் உள்ள நேரங்களில் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறும், தேவையேற்படின் முகக்கவசம் அணியுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US