கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிசூடு ; சிகிச்சை பலனின்றி நபர் உயிரிழப்பு
கொழும்பு மவுண்ட் லவினியா, ஹுலுதாகொட வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுபோவில போதனா வைத்தியசாலை
இன்று (15) இரவு சுமார் 9.50 மணியளவில், ஹுலுதாகொட வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் குறித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர் உடனடியாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ராகம பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட சந்தேகநபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் மவுண்ட் லவினியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.