யாழ்ப்பாண யூடியூப்பரின் காதல் வாழ்க்கையில் திடீர் திருப்பம் ; சமூக வலைத்தளத்தில் பரவும் தகவல்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யூடியூப்பர் ஒருவரின் காதலி மற்றும் அவருக்காக பணியாற்றிய வீடியோ எடிட்டர் தொடர்பில் காதல் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளப் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.
யூடியூப்பர் தனது வீடியோ எடிட்டிங் பணிகளுக்காக பாடசாலை நண்பரான ஒருவரை பணியமர்த்தியதாகவும், குறித்த எடிட்டர் கொக்குவில் பகுதியில் நடத்தி வந்த போட்டோ கடை எடிட்டிங் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், யூடியூப்பரின் காதலி அந்த இடத்திற்கு அடிக்கடி சென்று வந்த நிலையில், அவருக்கும் எடிட்டருக்கும் இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டதாகவும், இந்த விவகாரம் பின்னர் யூடியூப்பருக்கு தெரியவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து யூடியூப்பர் இருவரிடமிருந்தும் விலகியதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.