இலங்கையின் கடன் ; Fitch Ratings யின் அறிவிப்பு
இலங்கையில் கடன் வழங்குநர்களுக்கு ஒப்பீட்டளவில் கடன் செலுத்தும் திறனில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வெளிப்படுத்தும் வகையில் இலங்கையின் தேசிய தரவரிசை அளவுகோலை (Sri Lanka National Rating scale) மறுசீரமைப்பதாக (recalibrated) பிட்ச் ரேட்டிங்ஸ் (Fitch Ratings) நிறுவனம் அறிவித்துள்ளது.
2026 செப்டம்பர் 22 ஆம் திகதி இலங்கையின் நீண்டகால உள்ளூர் கடன் வழங்குநர் இயல்புநிலை தரவரிசை (Long-Term Local-Currency Issuer Default Rating - IDR) 'CCC+' இலிருந்து 'B-' வரை தரம் உயர்த்தியதன் பின்னர் விட்ச் நிறுவனம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தரவரிசை மாற்றங்கள்
பிட்ச் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த மறுசீரமைப்பானது தற்போது இலங்கையின் தேசிய தரவரிசையைக் கொண்டுள்ள சில கடன் வழங்குநர்களின் தரவரிசைகளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.
அத்தகைய தரவரிசை மாற்றங்கள் ஏதேனும் இருப்பின் அவை விரைவில் அறிவிக்கப்படும் என்று சர்வதேச கடன் தர நிர்ணய நிறுவனமான பிட்ச் தெரிவித்துள்ளது.
தேசிய அளவிலான தரவரிசைகள், ஒரு குறிப்பிட்ட சந்தைக்குள் இருக்கும் கடன் வழங்குநர்களின் ஒப்பீட்டு கடன் அபாயத்திற்கு ஏற்ப அவர்களை வரிசைப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும், இது உள்ளூர் முதலீட்டாளர்கள் வெவ்வேறு அளவிலான அபாயங்களை வேறுபடுத்திப் பார்க்க உதவுகிறது என்றும் பிட்ச் விளக்கமளித்துள்ளது.