யாழ். பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் திடீர் மரணம்
யாழ்ப்பாணத்தில் பகுதியில் பொலிஸ் விசாரணைக்காக அழைக்கப்பட்ட நபர் ஒருவர், பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த ப. சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் விசாரணைக்காக யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்திற்கு அவர் அழைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு சென்றிருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பொலிஸார் உடனடியாக அவரை மீட்டு யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.