சர்க்கரை நோய்க்கு டாட்டா சொல்லும் பப்பாளி இலை ஜூஸ்!
கடுமையான நோய்களைத் தவிர்க்க விரும்பினால், பப்பாளி இலையை சாறு எடுத்து அவ்வப்போது குடித்து வரவும்.
இந்த இலையில் உள்ள சில பயனுள்ள கூறுகள் உடலில் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுப்பதோடு சக்கரையின் அளவையும் குறைக்கின்றது.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்
பப்பாளி மரத்தின் அனைத்து பாகங்களுமே உடல் நலனுக்கு நன்மை அளிப்பவை என்றாலும், பப்பாளி இலையின் சாற்றை குடித்தவுடன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைய ஆரம்பிக்கும்.
சர்க்கரை நோய் முதல் டெங்கு வரை அனைத்திற்கும் அருமருந்தாக செயல்படும் ஒரு பப்பாளி இலை மட்டுமே.
பப்பாளி இலைச்சாறு
உடல் எடை அதிகரிப்பு அல்லது வீக்கம் என பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பப்பாளி இலை சாறு ஒரு மந்திர மருந்து என்றே சொல்லலாம்.
பப்பாளி இலைகளில், பப்பாளியில் இருக்கும் அனைத்து சத்துக்களும் உள்ளன. வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ள பப்பாளி இலை சாற்றைத் தொடர்ந்து குடித்து வந்தால், பல நோய்களில் இருந்து விடுபடலாம்.