உலக பிரபலமான Rolls Royce Phantom காரை கொள்வனவு செய்த டட்லி சிறிசேன
இலங்கையின் முன்னணித் தொழிலதிபர்களில் ஒருவரான டட்லி சிறிசேன, தனது ஆரம்பகால வாழ்க்கைப் போராட்டங்கள் மற்றும் தற்போதைய வெற்றி குறித்து வெளியிட்ட செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாட்டின் முன்னணி வர்த்தகரான அரலிய குழுமத்தின் தலைவரான டட்லி சிறிசேன, உலகின் மிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். உலக பிரபலமான ரோல்ஸ் ரொய்ஸை காரை கொள்வனவு செய்து நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.

Rolls Royce Phantom
Phantom Centenary Edition ரகத்தை சேர்ந்த இந்த கார்களில் 25 கார்கள் மட்டுமே, நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. ரோல்ஸ் ரொய்ஸ் நிறுவனத்தின் அதன் 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக நிறுவனத்தால் இந்த 25 கார்கள் தயாரிக்கப்பட்டன.
தனது வெற்றிப் பயணம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், "நாற்பது வருடங்களுக்கு முன்னால் இந்தச் சிறிய லொறியுடன் தொடங்கிய பயணம்தான் என்னை இன்று இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.
ஆரம்பத்தில் பல கஷ்டங்களை அனுபவித்த போதிலும், இலக்கை அடையும் வரை நான் ஓயவில்லை," எனத் தெரிவித்துள்ளார். அவர் வாங்கிய Rolls Royce Phantom சொகுசு காருடன், தனது பழைய லொறியின் கதையையும் ஒப்பிட்டு, வெற்றி என்பது வெறும் அதிர்ஷ்டம் அல்ல, அது தொடர்ச்சியான உழைப்பின் பலன் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.
அந்த 25 கார்களின் ஒன்றை டட்லி சிறிசேன வாங்கியுள்ளார். டட்லி சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.