கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு
நுவரெலியா கொத்மலை காமினி திசாநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை எட்டியுள்ளதை அடுத்து, இன்று (09) மாலை 7.00 மணிக்கு நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் சிறிதளவு திறக்கப்பட்டுள்ளன.
இந்த வான்கதவுகள் ஊடாக வினாடிக்கு சுமார் 20 கனமீற்றர் வேகத்தில் மேலதிக நீர் கொத்மலை ஓயாவிற்கு திறந்துவிடப்படுவதாக இலங்கை மகாவலி அதிகாரசபையின் பிரதான அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் செயல்பாட்டுப் பிரிவு (கொத்மலை) அறிவித்துள்ளது.

இதன்காரணமாக நீர்த்தேக்கத்திற்கு கீழ் பகுதியிலுள்ள கொத்மலை ஓயா மற்றும் மகாவலி கங்கையின் நீர்மட்டம் மிகச்சிறிய அளவில் உயரக்கூடும் என்பதால், இதுகுறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு இது குறித்து உடனடியாக விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.