ஒரு காலத்தில் நாட்டை ஆட்டிப்படைத்த பெண் ஜனாதிபதியின் இன்றைய பரிதாப நிலை!
ஒரு காலத்தில் இலங்கையை ஆட்டிப்படைத்த பெண்மணியான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, அனுர அரசின் அதிரடி நடவடிக்கையால் தற்போது சொந்த வீடின்றி தவிப்பதாக ட்கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்க உத்தியோகபூர்வ வீட்டிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை வெளியேறுமாறு அறிவிக்கப்பட்ட நிலையில் , சந்திரிக்கா அம்மையார் , அரசாங்க வீட்டிலிருந்து வெளியேற 2 மாத கால அவகாசம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பந்தாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகள்
கொழும்பில் தனக்கு பொருத்தமான வீட்டினை கண்டுபிடிக்க கால அவகாசம் தேவைப்படுவதாக சந்திரிக்கா கோரிக்கை விடுத்துள்ளார். மூன்று வாரங்களுக்கு முன்பு கீழே விழுந்த பிறகு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையிலிருந்து தான் மீண்டு வந்துள்ளேன்.
மாடியிலிருந்து கூட கீழே செல்ல முடியாது. இது ஒரு தீவிர அறுவை சிகிச்சை. எனக்கு ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை பிசியோதெரபி உள்ளது. எனவே, தற்போது அந்த புதிய வீட்டில் நான் நகரவோ அல்லது எந்த வேலையும் செய்யவோ முடியாது.
தற்போது சில புதுப்பித்தல் பணிகள் செய்ய வேண்டிய ஒரு சிறிய வீட்டைக் கண்டுபிடித்துள்ளேன். என் மகன் வந்து ஒரு வாரம் எனக்கு உதவுவதாக கூறினார்.
புதிய சட்டம் இயற்றப்படும் வரை, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வாடகையை செலுத்தி தனது வாழ்நாள் முழுவதும் தற்போதைய இடத்தில் வாழ அனுமதி கேட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் எழுதினேன்.
ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் சந்திரிக்கா கூறியுள்ளார். வயதான காலத்தில் வெளியேறுவது கடினமாக உள்ளது. 15 ஆண்டுகளுக்குள் இரண்டு முறை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளேன்.
புதிய ஏற்பாடுகளின் கீழ் அதே இடத்தில் தங்க விரும்பினேன். பழுதுபார்ப்புகளுக்கு பணம் செலுத்தவும் நான் ஒப்புக்கொண்டேன்.
வீட்டை விற்று உண்ணும் நிலை
ஓய்வு பெற்ற பிறகு இது எனது உத்தியோகபூர்வ இல்லமாக ஒதுக்கப்பட்ட பிறகு, அதைப் புதுப்பித்தல், பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றிற்காக ஏற்கனவே நான் எனது 14 மில்லியன் ரூபாய் பணத்தை செலவிட்டுள்ளேன்.
நான் இங்கு வந்தபோது, இங்கு ஒரு புல் கூட இல்லை. கற்கள் மட்டுமே இருந்தன. நான் நிலத்தோற்றப் பணிகளைச் செய்து முடித்தேன். அந்த நேரத்தில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அதற்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டது.
தேர்தல் மேடைகளில் அனுரகுமார திசாநாயக்க கூச்சலிடத் தொடங்கிய நாளிலிருந்து, நாட்டின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கப் போகிறார்கள் என்பது பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை.
ஊழலைக் கையாள்வது பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அது நிச்சயமாக மிகவும் நல்லது. இருப்பினும், அவர்களின் சொந்த அரசாங்கத்தில் ஊழலை எவ்வாறு தடுப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. முன்னாள் ஜனாதிபதிகளை அவர்களின் வீடுகளிலிருந்து விரட்டுவது மாத்திரமே அவர்கள் வைத்திருந்த மற்றொரு கோஷமாகும்.
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்
பல நாடுகளில், இதை விட பல சலுகைகள் உள்ளன. இந்தியாவில் கூட, சிறந்த சலுகைகள் உள்ளன. கொழும்பில் எனக்கு வீடு இல்லை. எனது ஒரே வீடு ரோஸ்மீட் பிளேஸில் இருந்தது.
நான் அதை விற்றுவிட்டேன். நான் அந்தப் பணத்தில் வாழ்கிறேன். நான் ஊழலில் ஈடுபடவில்லை. ஜே.வி.பி.யின் ஊடகவியலாளர் சுதாவின் கடுமையான விமர்சனம் காரணமாக வீட்டு உரிமையாளர்கள் பயப்படுகின்றார்கள்.
ஜே.வி.பி தங்களை வேட்டையாடும் என்று வீட்டு உரிமையாளர்கள் கவலைப்பட்டனர், என்று முன்னாள் ஜனாதிபதி ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கையில் மட்டுமல்லாது உலகளவில் தற்போது பேசப்படும், யாழ்ப்பாணம் சித்துபாத்தி மனித படுகொலைகள் அரங்கேற்றபட்டபோதும், மாணவி கிருக்ஷாந்தி கொலை செய்யப்பட்டபோதும் இந்த சந்திரிக்க அம்மையாரே ஆட்சியில் இருந்தவராவார் என்பதை தமிழ் மக்கள் மறந்துவிடவில்லை.
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழி, இலங்கை முன்னாள் ஜனாதிபதிகளின் (மஹிந்த, ரணில், சந்திரிக்கா) தற்போதைய நிலையில் சரியாகதான் உள்ளது.