சபையில் சபாநாயகர், சஜித் , அர்ச்சுனா மோதல்!
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் , பேசுவதற்கு நேரம் வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேட்ட நிலையில் அதற்கு சபாநாயகர் வாய்ப்பு வழங்காததால் சற்று பதற்ற நிலை ஏற்பட்டது.
இதன்போது கல்வி விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவால் கேள்வி எழுப்பட்டது.
கலாசாரத்தை மதித்து செயற்படுங்கள்
இதன் போது, அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இது தற்போது பேசப்பட வேண்டிய விடயம் இல்லை எனவும் பாராளுமன்ற கலாசாரத்தை மதித்து செயற்படுங்கள் எனவும் தெரிவித்தார்.
அதேசமயம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா யாழ். மாவட்ட இலஞ்ச ஊழல் தொடர்பில் பேச முற்பட்ட போதும் இது ஒழுங்கு பிரச்சினை அல்ல என சபாநாயகர் அவரின் உரையை இடைநிறுத்தினார்.
இதையடுத்து தனக்கு நேரம் வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தொடர்ந்து கேட்டதால் சபையில் குழப்பம் ஏற்பட்டது.
அதன் பின்னர் சபாநாயகர் 30 செக்கன்கள் மட்டுமே வழங்கியதை அடுத்து எதிர்க் கட்சித் தலைவர் சஜித்திற்கு உரையாற்றினார்.