கிளிநொச்சியில் கோர விபத்து; மருத்துவமனையில் பாடசாலை மாணவன்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள ஏ9 வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் காயமடைந்துள்ளார்.
பாடசாலையில் இருந்து பிள்ளையை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு டிப்போ சந்தியில் பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் பரந்தன் இருந்து வவுனியா நோக்கி சென்ற டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிப்பர்
இன்று நண்பகல் பாடசாலையிருந்து பிள்ளையை ஏற்றி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பாடசாலை மாணவன் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனம் தப்பி செல்ல முற்பட்ட வேளை வீதியால் சென்ற பொதுமக்கள் டிப்பர் சாரதியை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.