உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவை சீண்டும் சீனா!
ரஷிய படைகளில் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்துவருகின்றன. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் உக்ரைன் மீதான ரஷிய ராணுவத்தின் தாக்குதல் குறித்து கூறுகையில், இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கை "வரலாற்று சூழல் சிக்கலானது" என்றும் தற்போதைய நிலைமை எல்லா வகையான காரணிகளாலும் ஏற்படுகிறது.
இதன்படி சம்பந்தப்பட்ட தரப்பினர் அமைதிக்கான கதவை மூடிவிட மாட்டார்கள். பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனையில் ஈடுபட்டு நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்க முடியும், மேலும் அமெரிக்கா இந்த விவகாரத்தில் “தீ”க்கு எரிபொருளைச் சேர்ப்பதாக அவர் கூறினார்.
கடந்த வாரங்களில் அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகள் நெருக்கடியை அதிகப்படுத்தியதாக சீனா குற்றம் சாட்டியது, சீனாவின் அதிகாரபூர்வ ஊடகங்கள் தொடர்ந்து உக்ரைன் மீதான ரஷியாவின் முழுத் தாக்குதலையும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பயன்படுத்திய வாசகமான "சிறப்பு இராணுவ நடவடிக்கை" என்று அழைத்து வருகின்றன.