உயிருக்கு உலைவைத்த நூடுல்ஸ் ; ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி; சம்பவத்தால் ஷாக்!
இந்தியா உத்தர பிரதேசத்தில் நேற்று இரவு நூடுல்ஸ் சாப்பிட்டு உறக்கத்துக்கு சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் , இன்று காலையில்மர்மமான முறையில் இறந்து கிடந்தத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது,

மர்மமான முறையில் இறந்து கிடந்த குடும்பம்
உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா அருகே உள்ள ராபுபுரா பகுதியில் அமைந்து இருக்கும் நாக்லா ஸ்ரீபாதம் கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது 37). இவரது மனைவி பெயர் லலிதா (35). இந்த தம்பதிக்கு லட்டு (11), சக்சாத் (3) என்ற 2 மகன்களும், மிஸ்தி (7) என்ற ஒரு மகளும் இருந்தனர். இவர்களின் வீடு இன்று காலையில் நீண்டநேரம் ஆகியும் திறக்கவில்லை.
இதனால் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் சந்தேகம் அடைந்தனர். வீட்டு கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் யாரும் திறக்கவில்லை.
இதனையடுத்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது வீட்டில் 5 பேரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது 5 பேரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
உடனடியாக போலீசாரக்க தகவல்தெரிவிககப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 5 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணையை தொடங்கி உள்ளனர்.
முதற்கட்ட விசாரணையின்போது இறந்த மகேஷின் தாய் கூறுகையில், ''இரவில் எனது மகன், மருமகள், பேரன், பேத்திகள் என 5 பேரும் நூடுல்ஸ் சாப்பிட்டனர். காலையில் அவர்கள் இறந்துபோய் உள்ளனர்'' என்று கதறிஅழுதபடி கூறிய நிலையில் மரணத்திற்கு Food Poison காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள போலீசார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
இன்னிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.