அனிருத் - காவ்யா மாறன் திருமணம்; குடும்பத்துடன் சென்று முதலமைச்சர் விஜய்க்கு அழைப்பு!
அனிருத்துக்கும், சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறனின் மகள் காவிய மாறனுக்கும் திருமணம் நடைபேறவுள்ள நிலையில், அனிருத் தாய் தந்தையுடன் சென்று முதலமைச்சர் விஜய்க்கு அழைப்பிதழ் வழகியுள்ளார்.
தற்போது கோலிவுட்டில் நம்பர் ஒன் இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தவர் இவர்.

கிரீஸ் நாட்டில் அனிருத் திருமணம்
படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசையும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அனிருத்துக்கும், சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறனின் மகள் காவிய மாறனுக்கும் வருகிற நவம்பர் 10ம் தேதி கிரீஸ் நாட்டில் உள்ள ஒரு தீவில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருக்கிறது.
அதேபோல் வருகிற நவம்பர் 21ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில் கலாநிதி மாறன், அவரின் மனைவி மற்றும் அனிருத் ஆகியோர் தமிழக முதல்வர் விஜயை நேரில் சந்தித்து திருமண பத்திரிக்கை கொடுத்தனர். அது தொடர்பான புகைப்படங்களும் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது.
முதலமைச்சர் விஜயின் கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ ஆகிய திரைப்படங்களுக்கு அனிருத் இசையமைத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.