தேனிசை தென்றல் தேவா காலமானார்; திரைதுறையினர் பெரும் அதிர்ச்சி
தென்னிந்திய சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான தேனிசை தென்றல் தேவா காலமானதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன. தேனிசை தென்றல் தேவா தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகருமாவார்.
தேனிசை தென்றல் தேவா பல கானா பாடல்களை எழுதியும், அப்பாடல்களைத் தானே பாடியும் உள்ளார். இவருடைய கானா பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும்பிரபலம். இன்னிலையில் மாரடைப்பு காரணமாக தேனிசை தென்றல் தேவா 75 ஆவது வரயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைதுறையினர் பெரும் அதிர்ச்சி
தேனிசை தென்றல் தேவா ரஜனி, கமல், விஜய் , அஜித் என பல முந்னனி நடிகர்களின் திரைபடங்களுக்கு இசையமைத்தவர் ஆவார்.
ஏறத்தாழ 36 ஆண்டுகால வாழ்க்கையில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களுக்குப் பாடல்களையும், பின்னணி இசையையும் வழங்கியுள்ளார்.
400-இற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இன்னிலையில் அவரது மரணம் திரைதுறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.