பொலிஸாரைத் தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்க்கும் கஸ்ஸப தேரர்
அனுராதபுரம் ருவன்வெலி மகா சேயவுக்கு அருகில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட பாலங்கொட கஸ்ஸப தேரர், பொலிஸாரைத் தகாத வார்த்தைகளால் திட்டும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.
காணொளியில், மருத்துவமனைப் படுக்கையில் இருக்கும் தேரரைச் சுற்றி மருத்துவப் பணியாளர்களும் பொலிஸாரும் காணப்படுகின்றனர்.

பொலிஸாரை நோக்கி தேரர் தகாத வார்த்தை
இதன்போது பொலிஸாரை நோக்கி தேரர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி அச்சுறுத்தும் வகையில் பேசுவது பதிவாகியுள்ளது.
ருவன்வெலிசாயவுக்கு அருகில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது, பாலங்கொட கஸ்ஸப தேரர் தரப்பினருக்கும் ராஜங்கனயே சத்தாரத்தன தேரர் தலைமையிலான குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டனர்.
புனித அனுராதபுரம் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட பாலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஏழு பேர், நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாலங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நால்வருக்கும் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.