சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம் ; அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
வேத ஜோதிடத்தில் கிரகங்கள் அவ்வப்போது ஒன்றிணைந்தோ அல்லது நிலைகளின் முலமோ அல்லது பார்வைகளாலோ யோகங்களை உருவாக்கி, மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அசுரர்களின் குருவான சுக்கிரனும் சேர்ந்து ஒரு அரிய யோகத்தை உருவாக்கவுள்ளர். அதுவும் இந்த யோகமானது ஜூன் 25 ஆம் திகதி உருவாகிறது. குறிப்பாக 5 ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சியை காணவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

மேஷம்
சனி சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். இதன் மூலம் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்
சனி சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை காண்பார்கள். மாணவர்களுக்கு இக்காலமானது மிகவும் சிறப்பானதாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். இதனால் நிதி நிலைமை உயரும்.

சிம்மம்
சனி சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகத்தால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நன்மைகளைப் பெறுவார்கள். வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்திறக்ன வாய்ப்புக்கள் கிடைக்கும். தன்னம்பிக்கைஇரட்டிப்பாக அதிகரிக்கும். சமூகத்தில் மரிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

தனுசு
சனி சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு மங்களரமானதாக இருக்கும். அதுவும் கிரகங்களின் கூட்டணியால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத அளவில் முன்னேற்றமும், லாபமும் கிடைக்கும். நிதி நிலைமை எதிர்பாராத அளவில் மேம்படும் வாய்ப்புள்ளது.

மகரம்
சனி சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகத்தால் மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சனி பகவானின் தாக்கத்தால் வாழ்வில் ஒழுக்கம் அதிகரிக்கும். வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். பண பிரச்சனைகள் தீரும். நிதி நிலைமை இரட்டிப்பாகும்.
