எதிர்கட்சித் தலைமைத்துவத்தில் தலையிடும் நாமல்; சுட்டிக்காட்டிய லால்காந்த
எதிர்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவே எதிர்கட்சித் தலைமைத்துவத்தில் அதிகம் தலையிடுவதாக விவசாய அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டின் அரசியல் கலாச்சாரத்தின்படி, எதிர்க்கட்சி ஆட்சியை ஆதரிப்பதில்லை. அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டதாக ஒரு கருத்தை உருவாக்கி ஆட்சியை கைப்பற்ற அவர்கள் விரும்புகின்றார்கள்.
இந்த நாட்டில் சரியான எதிர்க்கட்சி இல்லை என்பது எங்கள் வருத்தம். முடிந்தால் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என நான் சவால் விடுகின்றேன்.
சஜித் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், சமூகம் அவரை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை.
நாமல் ராஜபக்சவின் கடந்த கால செயற்பாடுகள் காரணமாக அவராலும் எதிர்கட்சித் தலைமையை பெற முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.