சகோதரரின் வீட்டில் நேர்ந்த கொடூரம் ; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!
குருநாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாகல்கமுவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று ஞயிற்றுக்கிழமை (12) இரவு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆயுதத்தால் தாக்கப்பட்ட குறித்த நபர், காயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
குடாகல்கமுவ - பெபொல்வெல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தனது சகோதரரின் வீட்டில் வேறொரு குழுவுடன் மது அருந்திக் கொண்டிருந்த நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, உயிரிழந்தவரை சகோதரர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சடலம் குருநாகல் வைத்தியசாலையின், பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.