யாழில் இரட்டைச் சகோதரிகள் மரணத்தில் குடும்பத்தினர் வெளியிட்ட திடுக்கிடும் குற்றச்சாட்டுகள்

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Fire Death
By Sahana Nov 17, 2026 01:11 AM GMT
Report

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனில் தீயில் எரிந்து உயிரிழந்த இரட்டைச் சகோதரிகளின் மரணம் தற்கொலை அல்ல, திட்டமிட்ட கொலை என அவர்களது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஒலிம்பிக் வீரர்களுக்கான பரிசுத் தொகை தொடர்பில் அமைச்சர் அதிரடி அறிவிப்பு

ஒலிம்பிக் வீரர்களுக்கான பரிசுத் தொகை தொடர்பில் அமைச்சர் அதிரடி அறிவிப்பு

கடந்த 01.08.2026 அன்று க.பொ.த உயர்தரப் பிரிவில் கல்வி பயின்று வந்த குறித்த இரட்டைச் சகோதரிகள் தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மரண வாக்குமூலம்

இந்நிலையில், உயிரிழந்த சகோதரிகளில் ஒருவர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது வழங்கிய மரண வாக்குமூலத்தில், தாங்களாகவே தீ மூட்டிக்கொண்டதாகத் தெரிவித்திருந்தார்.

யாழில் இரட்டைச் சகோதரிகள் மரணத்தில் குடும்பத்தினர் வெளியிட்ட திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் | Mysteries Emerge Surrou Deaths Twin Sisters Jaffna

எனினும், குறித்த வாக்குமூலம் அச்சுறுத்தலின் காரணமாகவே வழங்கப்பட்டதாகவும், சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு கூறியதாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் குடும்பத்தினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளின்படி, சம்பவத்தன்று ஐவர் வீட்டுக்குள் நுழைந்ததாகவும், அவர்களில் ஒருவர் சகோதரிகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தை நேரில் கண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சாட்சியை உண்மையை வெளிப்படுத்தினால் ஆபத்து ஏற்படுத்துவதாக அச்சுறுத்தியதாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

மேலும், சம்பவம் இடம்பெற்ற வீட்டின் வராந்தாவில் காணப்பட்ட எரிந்த அடையாளங்கள் தொடர்பிலும் குடும்பத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அங்கு காயவைக்கப்பட்டிருந்த ஆடைகளே தீயிட்டு எரிக்கப்பட்டிருந்ததாகவும், சகோதரிகள் எரிந்த இடம் அதுவல்ல எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், வீட்டுக்குள் சகோதரிகள் இருவரும் அருகருகே எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும், அவர்கள் தாங்களாகவே தீ மூட்டியிருந்தால் வீட்டுக்குள் உருண்டு புரண்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டிருக்க வேண்டும் எனவும் குடும்பத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் வீட்டின் பின்புறத்தில் இரண்டு கையுறைகள் எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும், அண்மையில் வீட்டின் முன்புறம் வாழை மரத்துக்கு அருகில் குழி தோண்டியபோது மற்றுமொரு கையுறை கண்டெடுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மண்ணெண்ணெய் கொள்கலனின் கைப்பிடியில் கைரேகைகள் இல்லாத நிலையில், அதன் கீழ்ப்பகுதியில் விரல் அடையாளங்கள் காணப்பட்டதாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

மண்ணெண்ணெய் கொள்கலனும் தீப்பெட்டியும் அருகருகே வைக்கப்பட்டிருந்தமையும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

செயலிழந்த சிசிடிவி கமரா

இதற்கிடையில், வீட்டிலிருந்து சுமார் 75 மீற்றர் தொலைவில் உள்ள பற்றைக்காணியில் ஆடைகள் எரிக்கப்பட்ட அடையாளங்கள், வீட்டில் காணாமல் போன தரைப்பாள் துண்டு, வயர் மற்றும் கயிறு போன்ற பொருட்கள் காணப்பட்டதாகவும் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

யாழில் இரட்டைச் சகோதரிகள் மரணத்தில் குடும்பத்தினர் வெளியிட்ட திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் | Mysteries Emerge Surrou Deaths Twin Sisters Jaffna

அதற்கு அருகிலுள்ள பாழடைந்த கட்டடத்தின் சுவரில் இரத்த மாதிரிகள் காணப்பட்டதாகவும், அவற்றை ஆய்வு செய்யுமாறு பல தடவைகள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும், வீட்டுக்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள ஆலயத்தின் சிசிடிவி கமரா செயலிழந்திருந்ததாகவும், வீட்டுக்கு அருகிலுள்ள மற்றுமொரு வீட்டின் சிசிடிவி கமராவின் வன்தட்டு (Hard Disk) கழற்றப்பட்டிருந்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சகோதரிகள் இருவரும் கிளப்புக்குச் செல்வதைத் தாம் விரும்பாததுடன், அடுத்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்ததால் அவர்களது கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கிலேயே அதனைத் தடுத்ததாகவும், அவர்களது ஆடைகளைத் தாம் எரிக்கவில்லை எனவும் அண்ணன் தெரிவித்துள்ளார்.

மரண விசாரணைகளின்போது பொலிஸார் தன்னிடம் கடுமையாக நடந்துகொண்டதாகவும், சடலங்களை ஒரு வருடத்துக்கு வெளியே எடுக்க அனுமதிக்கமாட்டோம் என அச்சுறுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியைத் தவிர ஏனைய கீழ்நிலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதும் தமக்குச் சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்ட குடும்பத்தினர், தாம் முன்வைத்துள்ள சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

கஸ்ஸப தேரர் விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கஸ்ஸப தேரர் விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, வவுனியா

16 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, London, United Kingdom

08 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

16 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வெலிமடை, கொக்குவில், அரியாலை, Mississauga, Canada

14 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US