தமிழர் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாய் திடீர் மாயம் ; பொதுமக்களிடம் உதவி கோரிய பொலிஸார்
அம்பாறை மாவட்டம், கல்முனைப் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கடந்த ஐந்து நாட்களாகக் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுப்ரமணியம் கற்பகக்கரசு என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும், இது தொடர்பில் அவரது கணவர் கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் கல்முனை, கடற்கரை வீதி, இலக்கம் 29/2 என்ற முகவரியில் வசித்து வந்துள்ளார்.

இவருக்கு 14 வயதுடைய பெண் பிள்ளை, 10 வயதுடைய ஆண் பிள்ளை மற்றும் 6 வயதுடைய ஆண் பிள்ளை என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், வீட்டிலிருந்து வெளியேறிய அவர் இதுவரை வீடு திரும்பவில்லை எனக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அவர் யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதிக்குச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கணவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் கல்முனை தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மூன்று சிறு பிள்ளைகளின் தாயான இவரைக் கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ள குடும்பத்தினர், அவரைப் பற்றிய ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் உடனடியாக அறிவிக்குமாறு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தகவல் தெரிந்தவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள்:
071 419 6223
074 278 1199
அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்குமாறும் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.