லண்டனில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நிகழ்வு
லண்டன் Trafalgar Square இல் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு அவல நிகழ்வின் 15 ஆவது வருட நிகழ்வு மிக சிறப்பாக நடந்தது.
குறித்த நிகழ்வானது 18 மே 2024 மாலை 4:30 தொடக்கம் மாலை 7:00 இடம்பெற்றுள்ளது.
நிகழ்வில்கலந்துகொண்டு உரையாற்றிய இங்கிலாந்தின் அரசியல் பிரபலங்கள், ஈழத்தில் நிகழ்த்தப்பட்டது ஒரு இனழிப்புதான் என்பதனை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டு அதற்கான வருத்தங்களையும் தெரிவித்து சர்வதேசத்தினதும்,
ஐக்கியநாடுகள் சபையின் கையாலாகாத்தனத்தையும் ஏற்றுக்கொண்டு தமது உரைகளை நிகழ்த்தியிருந்தமையானது இதுவரைகாலமும் தொடர்சியாக சளைப்படையாமல் செயலாற்றிய எம்மவர்களின் செயற்பாடுகளுக்கு கிடைத்த அங்கீகாரமும், வெற்றியுமாகவே பார்கப்படவேண்டி இருக்கின்றது.
அத்துடன், அங்கே நிகழ்வை மிக நேர்த்தியாக, ஒழுங்கான அமைப்பு முறைகளுக்கமைய திட்டமிடப்பட்டு அதிகூடிய இளையோரும் கலந்து கொண்டிருந்தமை தமிழினம் சரியான பாதையூடாக பயணித்துக்கொண்டிருப்பதனையும், ஒரு நம்பிக்கையையும் தந்திருக்கின்றது.
இவ்வாறான நிலை ஒன்று புலம்பெயர் நாடுகளில் காணப்படுகின்ற சந்தர்பத்தில், தாயக்நிலத்திலும்3 மிக சிறப்பாக தடைகளை கடந்து சிங்கள நீதித்துறை, சிங்களகாவல்துறை போன்றவற்றின் அழுத்தங்களை சமாளித்து மிக வெற்றிகரமாக அஞ்சலி நிகழ்வை நிகழ்தியிருந்தமை மிகுந்த பாராட்டுக்கும், வரவேற்புக்கும் உரியது.
இந்த முன்மாதிரியை ஒரு சான்றாக கொண்டு தமிழர்களாக இருந்தும் இன அழிப்பு செய்த குற்றவாளிகளை காப்பாற்றகூடிய செயற்பாடுகளில் ஈடுபடுவதையோ அல்லது கால அவகாசம் வாங்கிக்கொடுக்கின்ற பணிகளில் இனிமேலவது ஈடுபடமல் இருந்து நாம் அனைவரும் தமிழர்கள் என்ற ஒற்றை நிலைப்பாட்டுடன் செயற்பட வேண்டும்.
இல்லையேல் எதிர்வருகின்ற காலங்களில் மக்கள் அவ்வாறான இனவிரோத செயல்களில் ஈடுபடுகின்றவர்களை சமூகத்திலிருந்தும், அரசியலில் இருந்தும் முற்றுமுழுதாக தூக்கி எறிந்துவிடும் என்பதனை இந்த மக்கள் எழுச்சி மிக சிறப்பாக எடுத்து காட்டுகின்ற செய்தியாக அமைந்திருக்கின்றது.