தமிழகத்தில் திருமண பந்தத்தில் இணையும் ஜீவன் தொண்டமான்; ரணிலும் பங்கேற்பு!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானின் திருமணம் எதிர்வரும் 23ஆம் திகதி தமிழ்நாடு, திருப்பத்தூரில் நடைபெறவுள்ளது.
நேற்று (19) நிச்சயதார்த்த நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

தமிழக முதலமைச்சர் உட்பட தமிழக அரசியல்வாதிகள்
ஜீவனின் பாட்டனார் செளமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் இருந்து மணமகளின் உறவினர்களுடன் தொண்டமான் குடும்பத்தினருக்கு நெருங்கிய உறவு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் உட்பட தமிழக அரசியல்வாதிகள் பலரும் அங்கு திருமணத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.
அதேவேளை மணமகள் ரா. சீதைஸ்ரீ நாச்சியாரும், ஜீவன் தொண்டமானும் ஒரே வைத்தியசாலையில் 07 வருட இடைவெளியில் பிறந்தவர்கள் என கூறப்படுகின்றது.
திருமண நிகழ்வில் ரணில் மற்றும் இலங்கை அரசியல் பிரமுகர்கள்
அதேவேளை இதொகாவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (21) இந்தியா செல்கின்றார்.
ஐதேகவின் முக்கிய பிரமுகரான முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இந்த தகவலை வெளியிட்டார்.

எனவே, நுகேகொடை கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்பது சாத்தியமில்லை எனவும், இரண்டாம் தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவதே ரணிலின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் இலங்கையிலுள்ள மேலும் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள், இராஜதந்திரிகள் பங்கேற்கவுள்ளனர்.