திருமலை புத்தர் சிலை சர்ச்சை; இனவாதத்தை அனுமதிக்க மாட்டோம்; தேரர் சீற்றம்
திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் முழுமையாக திட்டமிட்ட இனவாத செயற்பாடு என இராஜாங்கனை சத்தாரத்தன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அது தொடர்பில் இராஜாங்கனை சத்தாரத்தன தேரர் மேலும் தெரிவிக்கையில்,

மோசடியாளர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்
திருகோணமலை புத்தர் சிலை தொடர்பில் பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு நெருங்கிய தொடர்புள்ளது. கஸ்ஸப தேரர் முழுமையான இனவாதி. அவருக்கு பணம் கொடுத்தால் அவர் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒருவர்.
கஸ்ஸப தேரர் தலையிடும் விடங்களில் குழப்பங்கள் ஏற்படுவது வழமையான ஒன்றாகும். அதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி அரசுக்கு எதிராக பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது.
இந்த பேரணி, சமகால அரசாங்கத்தை கவிழ்க்க நாமல் ராஜபக்சவினால் முன்னெடுக்கும் செயற்பாடாகும் திருகோணமலைக்கு அடுத்தடுத்து தேரர்கள் செல்கின்றார்கள். ஞானசார தேரரும் சென்றார்.
அப்படி என்றால் ஏதோ ஒரு பிர்ச்சினை உள்ளதென அனைவருக்கும் தெரியும். தவறான விடயங்களுக்கு நாங்களும் எதிர்ப்பு தான். அரசாங்கத்தை கவிழ்க்க இந்த மோசடியாளர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
அதற்கான இனவாதம் மதவாதம் தூண்டப்படும் என நான் பயமின்றி கூறுவேன். இந்த மோசடி செயற்பாடுகளில் ஏமாற வேண்டாம் என நான் பொது மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
போதை பொருள் கடத்தல்காரர்கள், ஏமாற்றுக்காரர்கள், திருடர்களால் இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்கின்றனர் என்றும் இராஜாங்கனை சத்தாரத்தன தேரர் மேலும் தெரிவித்தார்.