நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் ; பரிதாபமாக பிரிந்த உயிர்
ஹெம்மாத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணவல - தம்பவிட்ட வீதியின் எரமினிகம்மன பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
கோணவல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மேலதிக சிகிச்சை
விபத்தில் படுகாயமடைந்த இரண்டு சாரதிகள் மற்றும் பின்னால் பயணித்த இருவர் என நால்வரும் ஹெம்மாத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி ஒரு சாரதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தெவனகல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த மற்றைய மூவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக மாவனெல்லை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த வாகன விபத்துக்கள் குறித்து மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.