நீராட சென்ற 10 பேருக்கு நேர்ந்த பெரும் துயரம் ; இரு சடலங்கள் மீட்பு ; இலங்கையில் சம்பவம்
தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற 15 பேரில் 10 பேர் இன்று (16) மாலை நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
நீரில் மூழ்கியவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேடுதல் நடவடிக்கை
நீராடச் சென்ற குழுவில் மேலும் 6 பேர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்கள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
நீரில் மூழ்கிய நிலையில் இருந்த இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போன 6 பேரையும் கண்டுபிடிப்பதற்காக பிரதேச மக்களும், பாதுகாப்புப் படையினரும் இணைந்து தற்போது தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக மேலும் குறிப்பிட்டுள்ளது.